
மலையாள சினிமா துறையை உலுக்கிய அறிக்கை
2017ம் ஆண்டு உருவாக்கபப்ட்டது. ‘வுமென் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. பெண் நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக புகார்களை முன்வைத்துள்ளனர். இதனையே நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையும் உறுதி செய்திருந்தது. அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, பாதுகாப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களும், அவர்கள் குற்றம் சுமத்திய ஆண்களின் பெயர்களும் அடங்கிய பகுதிகள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.