தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். இங்க ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அதுவும் சாதாரணமான பழைய மாணவர்கள் அல்ல. அசாத்தியமானவர்கள். யாரும் ஃபெயில் ஆனவர்கள் இல்ல. எல்லாரும் ரேங்க் வாங்கிட்டு கிளாஸ் விட்டு போக மாட்டேனு இங்கேயே இருப்பவர்கள் ” என்று பேசினார் , மேலும் அவர் துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு கலைஞர் கண்ணுலயே விரல் விட்டு ஆட்டினவர் அவர்கிட்ட ஏதாவது விஷயம் சொன்னால் ‘சந்தோசம்’ என்று சொல்வார் நல்லா இருக்கு என்று சந்தோசம் சொல்கிறாரா என்னடா இப்படி பண்றீங்கன்னு சந்தோசம் சொல்கிறாரா என்று புரியவே புரியாது” என்று கூறி விட்டு மேட்டையில் அமர்ந்திருந்த முதல்வரை பார்த்து, “ஸ்டாலின் சார் ஹாட்ஸ் ஆஃப் டு யூ” என்றார். அப்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. இந்த மேடை பேச்சு அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்களை விதைத்து வருகிறது
