
August 2024


பாஸ்போர்ட் சேவை இணையத்தளம் இரண்டு நாட்கள் இயங்காது
தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் சேவைகள் வழங்கும் இணையத்தளம் வரும் 29 இரவு முதல் செப்டம்பர் 2 காலை வரை இயங்காது என அறிவித்தது.

அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் 7.5
மருத்துவ படிப்பு 2020-21-ம் ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 2021-22-ல் 555 பேரும் 2022-23-ல் 584 பேரும் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். நடப்பு 2023-24-ம் ஆண்டில் 622 பேரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள். 496 எம்பிபிஎஸ் படிப்பிலும் 126 பிடிஎஸ் படிப்பிலும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு காரணமாக கூலித்தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், ஏழை விவசாயி…

ரஜினி பேச்சு-அடங்காத சலசலப்பு..
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். இங்க ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அதுவும் சாதாரணமான பழைய மாணவர்கள் அல்ல. அசாத்தியமானவர்கள். யாரும் ஃபெயில் ஆனவர்கள் இல்ல. எல்லாரும் ரேங்க் வாங்கிட்டு கிளாஸ் விட்டு போக மாட்டேனு இங்கேயே இருப்பவர்கள் ” என்று பேசினார்…

காரைக்குடி வாரச்சந்தை-கட்டிய கடைகள் வீணா?
காரைக்குடியில் 50 ஆண்டுகளாக சந்தைபேட்டையில் திங்கள் கிழமை தோறும் இயங்கிவரும் வரச்சந்தை கொப்புடையம்மன் கோவிலுக்கு சொந்தமான் இடமாகும். அங்கு புதிதாக கடைகள் கட்ட சில ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது 1.5 கோடியில் கட்டப்பட்டு ரெடியான கடைகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல், சுமார் 400 பேர் வியாபாரம் செய்த இடத்தில் 90 கடைகள் மட்டுமே கட்டப்பட்டது ஏன்? திறப்பு விழா செய்தும் அதனை வியாபரிகள் பயன்படுத்தாமல் பழையபடி திறந்த இடத்தில் நடப்பது எதற்காக? விளக்குமா காரைக்குடி மாநகராட்சி…..

தங்கம் விலை இன்று -மதுரை- ரூ 6694
மதுரையில் தங்கத்தின் விலை தினமும் மாறுகிறது. அதுவும் ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறுகிறது. இன்று 22காரட் 6694 க்கும், 24 காரட் 7303 க்கும் விற்பனையாகிறது

நிரம்பிய ஊரணி
பல ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளத்தூர் நகர சிவன் கோவில் ஊரணி நிரம்பிய காட்சி.மகிழ்ச்சியில் மக்கள்

மழை நீா்க் கால்வாய்களை தூா்வாரும் பணி
காரைக்குடி மாநகராட்சியில் மழை நீா்க் கால்வாய்களை தூா்வாரும் பணி நேற்று தொடங்கியது. காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மேயா் சே. முத்துத்துரை தூா்வாரும் பணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா்கள் சொ. கண்ணன், காா்த்திகேயன், கலா, தெய்வானை, நாச்சம்மை, பொறியாளா் செந்தில்குமாா், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
தமிழக மக்களின் கலாச்சாரம் காத்து நிற்க கூடிய இயக்கம் திமுக.” காரைக்குடியில் இளைஞர் அணி பேச்சுப் போட்டியில் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் பேச்சு காரைக்குடி அபூர்வா மஹாலில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி

OPS பரபரப்பு பேட்டி
எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அங்கம் வகிப்பது குறித்து தேர்தல் வரும் போது முடிவெடுப்போம். காரைக்குடியில் ஓபிஎஸ் பேட்டி