
பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் இன்று(செப்.7) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது.அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.