
ஜம்மு-காஷ்மீா்: இன்று இரண்டாம் கட்டத் தோ்தல்
ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ள நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்கவுள்ளனா்.மூன்றாம் மற்றும் இறுதிகட்ட தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.