செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்பது அதில் முக்கியமானதாகும்.

Read More

தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு களமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. 28ம் தேதி கோவை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read More

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் – நாளை பிரதமரை சந்திக்கிறார்

பள்ளிக்கல்வித்துறை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டு பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

Read More