
முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
3 முக்கிய கோரிக்கைகள் தில்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தமிழகத்துக்கு சமக்ரா சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிப்பது, சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை உடனே வழங்குவது, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம்…