பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “பாப்பம்மாளின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இயற்கை விவசாயத்தில் தனி முத்திரை பதித்தவர். அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை போற்றினர்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, பாப்பம்மாள் பாட்டியின் குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் தனது ஆறுதலை கூறினார்.
