சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரையும் மீட்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்

இந்திய வம்சாவளியை சேந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்கு சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தனர். வெறும் 8 நாட்கள் மட்டுமே விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் திட்டத்துடன் இவர்களை நாசா அனுப்பி வைத்தது. ஆனால், சுனிதா வில்லியம்ஸ் உள்பட இருவரும் பயணித்த ஸ்டார்லைனர்…

Read More

பாராசிட்டமால், பான் டி உள்பட 53 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டுத் தேர்வில் தோல்வி!

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, பாராசிடமால், விட்டமின் டி, கால்சியம் சத்து மாத்திரைகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள், நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் இல்லை. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் தன்னிச்சையாக மாத்திரைகளின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அதன்படி, ஆகஸ்ட் மாத ஆய்வு முடிவு இந்த தகவல்களை அளித்திருக்கிறது. விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின்…

Read More

தமிழக மீனவா்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

Read More

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

துணை முதல்வராகும் உதயநிதி

சென்னை: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் மாற்றம் செய்ய கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல, அமைச்சர்கள், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சர்களாக, செந்தில் பாலாஜி, நாசர் மற்றும் செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

Read More