
காரைக்குடி-வளா் தமிழ் நூலகத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி நன்கொடையாக அளித்துள்ள 1054 புத்தகங்கள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ12. 50 கோடியில் புதிதாக கட்டி வரும் வளா் தமிழ் நூலகத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி நன்கொடையாக அளித்துள்ள 1054 புத்தகங்களின் பட்டியலை பெரியாா் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை உறுப்பினா் காரைக்குடி சாமி. திராவிடமணி ப. சிதம்பரத்திடம் சனிக்கிழமை வழங்கினாா். அப்போது காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உடனிருந்தாா்.