
ஈஷா மையத்தில் காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை
கோவை தொண்டாமுதூரில் உள்ள ஈஷா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈஷா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.