விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் நேற்றைய விசாரணையின் போது 42 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட், தமிழக அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுவதாக கடும் அதிருப்தி தெரிவித்தது. இந் நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 42 இடங்களுடன் கூடுதலாக மேலும் 10 இடங்களுக்கு அனுமதி தரப்படுவதாகவும், 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிபந்தனைகள் அடிப்படையில் மொத்தம் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.
