இந்திய விமானப் படை தினத்தையொட்டி, சென்னையில் அக்.6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், விமானப் படையின் 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபடவுள்ளன.இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் புறநகர் மீது விமானப் படை விமானங்கள் பறந்தததை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். விமானப் படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு அக்.1 முதல் அக்.6-ஆம் தேதி வரை மெரீனா கடற்கரை, விமான நிலைய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
