காந்தியடிகளின் 156-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின்வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கதர் ஆடைகளை அணிந்து மகிழ்வோம், நெசவாளர்களை ஆதரித்து மகிழ்வோம். தமிழகத்தில் உள்ள கதர் நூற்பாளர்கள், நெசவாளர்களின் பொருளாதார மேம்பாடு, அவர்களது நலனை கருத்தில் கொண்டு கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கதர், கிராம பொருட்களை அதிக அளவில் வாங்கி, நாட்டுக்கு வலிமை சேர்க்க வேண்டும் என மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
