அ.தி.மு.க. 17-ம் தேதி 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

Spread the love

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , கழக நிறுவனத் தலைவர் `பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ 17.10.2024வியாழக்கிழமையன்று 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *