சமத்துவ நெறியைப் போற்றுவோம்: வள்ளலார் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

அருட்பிரகாச வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு முதலாக, “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று! “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்! “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத…

Read More

இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது.

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 4-ஆவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று(அக். 4) பலப்பரீட்சை நடத்தின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் திரட்டியது.இதையடுத்து இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Read More

விமானப்படை சாகசம்: மெரீனாவில் நாளை போக்குவரத்து மாற்றம்: பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீஸாா்

சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி, அக்டோபா் 6-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரீனா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பொதுமக்கள் சிரமமின்றி மெரீனா வந்து செல்லவும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காணவும் வசதியாக…

Read More

பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாதொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவகலத்தில் நேற்று நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது.மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள பிரிவு 163(1) தடை உத்திரவின் படிபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவிற்கு வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனம் ஆகியதிறந்த வெளிவாகனங்களில் வந்து கலந்து கொள்ள அனுமதி இல்லை. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.,…

Read More

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (அக்., 05) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 2 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் சிங் மற்றும் 101 பெண்கள் உட்பட 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதிவாகும் வாக்குகள் வரும் அக்., 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Read More