பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாதொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவகலத்தில் நேற்று நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது.மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள பிரிவு 163(1) தடை உத்திரவின் படிபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவிற்கு வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனம் ஆகியதிறந்த வெளிவாகனங்களில் வந்து கலந்து கொள்ள அனுமதி இல்லை. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., அலுவலகங்களில் வாகன அனுமதிச் சீட்டு பெற வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்குவிடக்கூடாது.
வழித்தடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்தமாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும்.
