20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிரணி களமிறங்கியது.18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி-20 தொடரில் தனது முதல் வெற்றிக் கணக்கை இந்திய மகளிரணி தொடங்கியுள்ளது.
