சென்னையில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள், நிகழ்ச்சி முடிந்ததும் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகினர். முறையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரயில் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் அலைமோதினர். வெயில், நெரிசலில் சிக்கி தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
