
விஜயதசமி | தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும்!
விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கல்வியை தொடங்கும் வகையில், குழந்தைகளை முதல் முறையாக பள்ளியில் சேர்ப்பார்கள்.ஆகவே நாளைய தினம் அரசுப் பள்ளிகள் செயல்பட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.