சென்னையில் பெய்யும் தீவிர மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், சென்னைக்கு வெளியே கடலில் இருந்த வலிமையான மேகங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. இவை மேலும் வலிமை அடைந்து.. சிட்டியை நோக்கி நகர்ந்து வருகின்றன.வரப்போகும் மழை மிக நீண்ட, தீவிரமான மழையாக இருக்க போகிறது. இந்த மழை 250 மிமீ மழையாக இருக்க போகிறது. முக்கியமாக இரவு நேரத்தில் மழை தீவிரம் அடையும். இரவு நேரம் நெருங்குவதால் மேகங்கள் இன்னும் வலிமை அடையும் வாய்ப்புகள் உள்ளன.போன் மற்றும் லேப்டாப் சார்ஜிங்…

Read More

நாளை 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை 

கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேசமயத்தில், காவல்துறை,தீயணைப்புத் துறை, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை– தமிழக அரசுக்கு, ஆளுநர் பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்று கூறினார்.

Read More

சென்னை மக்களுக்கு சுடச்சுட சாப்பாடு விநியோகிக்கும் மாநகராட்சி.. 86 உணவுக் கூடங்கள்

சென்னை மாநகராட்சி முழுவதும், அனைத்து வார்டுகளிலும், உணவு சமைக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவு கூடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு தேவைப்படுபவர்கள் இங்கு தொடர்பு கொண்டால் உணவு வழங்கப்படும். 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More

சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் தொடர் வேலை நிறுத்தம், தொழிலாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள், முதலமைச்சரின் தலையீடு, அமைச்சர்கள் பேச்சுவார்த்தை என்று கடந்த 32 நாட்களாக சாம்சங் இந்தியா நிறுவனத்தில் நடக்கும் போராட்டம் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன. தமிழக அரசின் நிலையை குறை கூறி, எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தன. அதன் பிறகு விவகாரத்தை தமிழக அரசு தீவிரமாக கையில் எடுத்தது. இதையடுத்துஅரசு, சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இன்று…

Read More

கனடா தூதரக அதிகாரிகள் ஆறு பேர் வெளியேற மத்திய அரசு உத்தரவு

கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த கனடா அரசு கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக டில்லியில் பணியாற்றிய அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்றியது. அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிடப்பட்டது.இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார்…

Read More

அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது அரசு. மழை குறித்து வதந்திகளை பரப்பக்கூடாது: அரசு அறிவுரை

அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை மழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்; அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. வசிப்பது தாழ்வான பகுதி எனில், அரசு முகாம் உட்பட பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும்அரசு வெளியிடும் முன்னெச்சரிக்கை, அறிவுரையை பின்பற்ற வேண்டும் கனமழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.1913,044-2561 9207,044-2561 9204,044-2561 9206,89911 24176,89911 24175, தாம்பரம் மாநகராட்சி உதவி எண்கள் 18004254355,18004251600,வாட்ஸ்…

Read More