சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது; தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரி-ஆந்திரா இடையே சென்னை அருகில் நாளை(அக்.17) கரையைக் கடக்கும்.புயல் சின்னத்தை தொடர்ந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 2 தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை, சில இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது
