சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் ஓரளவிற்கு முடிக்கப்பட்டு சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழைநீர் வடிகால் சென்னைக்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. மழைநீர் வடிகால் குழாய்களில் குப்பையை கொட்டாமல் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை அறவே தவிர்ப்பது, குப்பையை மொத்தமாக கொட்டாமல் தரம் பிரித்து தருவது போன்ற பணிகளில் சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வருங்காலங்களில் சென்னையில் இருந்து வெளியேறும் மழைநீர் மிக விரைவில் வெளியேறி அது மக்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும். சென்னையில் இவ்வளவு மக்கள் தொகை வாழும் இந்த மண்ணில் மொத்தமாக தண்ணீர் வெளியேற 4 வழிகளே உள்ளன. எண்ணூர் முகத்துவாரம், நேப்பியர் பிரிட்ஜ் முகத்துவாரம், அடையாறு முகத்துவாரம் மற்றும் ஒக்கியம் வழியாக கோவளம் முகத்துவாரம் என 4 வழிகளில் மட்டுமே மழைநீர் வெளியேறுகிறது. ஒரே நேரத்தில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் இந்த வழியில் மட்டுமே நீர் செல்ல வேண்டும். எனவே நீர் வெளியே செல்வதில் எப்போதுமே சென்னைக்கு சிக்கல் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக சென்னை மக்கள் பல்வேறு இடங்களிலும் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை முழுமையாக இழந்தனர். பல ஆயிரம் அல்லது லட்சங்களை தங்களது வாகனங்களுக்காக செலவு செய்தனர். பல வாகனங்கள் ஸ்கிராப் விலைக்கு விற்கப்பட்டன. மேலும் வீட்டில் உள்ள உடைமைகளையும் மழை வெள்ளத்தில் மக்கள் இழந்தனர். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழக் கூடாது என்பதற்காக சென்னை மக்களும் சரி, அரசு அதிகாரிகளும் சரி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த மழை காலத்திற்கு மேற்கொண்டனர். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே உஷாரான அரசு பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருந்தது. எப்போதும் தாமதமாக அதாவது நவம்பர் மாதத்தில் மட்டுமே பெரும் மழைைய எதிர்பார்த்து வந்த மக்களுக்கு தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்குகின்ற நாளே பேரிடியாக அமைந்தது. சென்னையில் மட்டும் சுமார் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சென்னை மீண்டும் மிதக்கப் போகிறது, மக்கள் அவதிக்குள்ளாகப் போகின்றனர் என அனைவரும் பயந்தனர். ஆனால் அப்படி எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை.காரணம் அரசு கடுமையாக போரடியது பாராட்டுக்குறியது.
