‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ -ஆளுநர் பதில்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் ஓர் ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக்…

Read More

சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!

தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதில், கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை,” என கவர்னர் மாளிகை கூறியுள்ளது. ‘இது கவனக்குறைவால் நேரிட்ட தவறு’ என்று கூறியுள்ள பிரசார் பாரதி, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

Read More

கவர்னரை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். ஹிந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் கவர்னர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழகத்தையும் – தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னரை மத்திய அரசு உடனடியாகத்…

Read More

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கண்ணா

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். அதன்படி, தலைமை நீதிபதிசந்திரசூட் வரும் நவம்பர் 10-ம்தேதி ஓய்வு பெறுகிறார்.

Read More

புரோ கபடியில் தமிழக வீரர்கள்

11வது புரோ கபடி தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் எப்போதும் இல்லாத வகையில் தமிழக வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அஜித்தை ரூ.66 இலட்சத்திற்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஸ்டூவர்ட்டை ரூ.14.2 இலட்சத்திற்கும், தமிழ்நாட்டின் சிறந்த கபடி வீரர் சதீஷ் குமாரை ரூ.13 இலட்சத்திற்கும், தனசேகரனை ரூ.9.4 இலட்சத்திற்கும் மும்பை அணி வாங்கியது. இளம் வீரர் தரணிதரனை ரூ.13 இலட்சத்திற்கு ஜெய்ப்பூர் அணியும், மணிகண்டனை ரூ.9 இலட்சத்திற்கு ஹரியானா…

Read More

ரூ.6,000 கோடி மோசடி நியோமேக்ஸ் வழக்கு

நியோமேக்ஸ் நிறுவன சொத்து களை முடக்குவதற்கான அரசாணை வெளியிடாவிட்டால், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற முதலீட்டுத்தொகை ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனால், இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலர் கைதாயினர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களும், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்….

Read More

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு விழா 

அதிமுக 53வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் நேற்று காலை 11 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை கொண்டாடிய பிறகு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான். அதுபற்றி இனி எந்த செய்தியும் போடாதீர்கள் என்று…

Read More

எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ், சேர மறுத்த 1,143 பேர் ஏன்?

சென்னை : மாநில ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களில் சேர்ந்ததால், 1143 சீட்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 13.5 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய், மாநில அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது; ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 19 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு 11 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.இதனால், சுயநிதி கல்லுாரிகளில் சேரும்…

Read More

உக்கடம் குளத்தில் ‘மிதக்கும்’ சோலார்

கோவை : உக்கடம் பெரிய குளத்தில், 50 சென்ட் நீர் பரப்பில், 1.45 கோடி ரூபாயில் ‘மிதக்கும் சோலார்’ அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.’நமக்கு நாமே’ திட்டத்தில், காய்கறி கழிவில் காஸ் தயாரிக்கும் திட்டத்துக்கு, சுவிட்சர்லாந்து துாதரகம், ஏற்கனவே நிதி வழங்கி, கோவை பாரதி பார்க் வளாகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதே போல உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் அமைக்க நிதி ஒதுக்கியது.அதில், 1.45 கோடி ரூபாயில், மிதக்கும் சோலார் மின்னுற்பத்தி நிலையம்…

Read More