அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் இருந்தே மக்கள் பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
