முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .

33-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது . இந்நிலையில்செலவினத்தை குறைப்பதற்காக, 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .அதன்படி, ஆக்கி , மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டேபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.

Read More

மகாராஷ்டிரா: 288 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல்- அக்.29 கடைசி நாள்!

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் நிலையில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 29-ந் தேதி கடைசி நாளாகும். மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Read More