அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு பில்கேட்ஸ் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

Read More

 செபி தலைவர் மாதவி புரி புச் பொது கணக்கு குழு முன் இன்று (அக்.24) ஆஜராகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம், செபி அமைப்பின் மாதவி புரி புச், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது, காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகமும், புலனாய்வு அமைப்புகளும் அவர் மீதான விசாரணையை துவங்கின.இதில் ஆர்.இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டுகளுக்கு சாதகமாக கொள்கை முடிவுகள் எடுத்து தனது கணவருக்கு தொடர்புடைய ‘பிளாக்ஸ்டோன்’ நிறுவனத்துக்கு உதவி செய்ததாக மாதவி புரி புச்…

Read More

விளையாட்டுகளில் சாதித்த 100 வீரர்கள்: அரசு பணி

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதித்த 100 வீரர்களுக்கு பணி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்த, மாவட்ட வாரியாக, தகுதியான விளையாட்டு வீரர்கள் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கி உள்ளன. விளையாட்டு வீரர்களின் கல்வித் தகுதி, சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்ற பதக்கத்திற்கு தகுந்தபடி, அரசு துறைகளில் விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

Read More