அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம், செபி அமைப்பின் மாதவி புரி புச், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது, காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகமும், புலனாய்வு அமைப்புகளும் அவர் மீதான விசாரணையை துவங்கின.இதில் ஆர்.இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டுகளுக்கு சாதகமாக கொள்கை முடிவுகள் எடுத்து தனது கணவருக்கு தொடர்புடைய ‘பிளாக்ஸ்டோன்’ நிறுவனத்துக்கு உதவி செய்ததாக மாதவி புரி புச் மீது குற்றம் சாட்டது.இந்த விவகாரத்தில் காங். எம்.பி., தலைமையிலான பார்லிமென்ட் பி.ஏ.சி. எனப்படும் பாராளுமன்ற பொது கணக்கு குழு முன் மாதவி புரி புச், இன்று (அக்.24) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாதவி புரிபுச் இன்று ஆஜராகிறார்.
