
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரை நாக்பூர் காவலதுறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜக்தீஷ் உக்கி என்பவரை நாக்பூர் காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.. பயங்கரவாதம் குறித்த புத்தகத்தை எழுதியவரும், ஏற்கனவே இவர் 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது