மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல

காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு; ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சுக் கொள்கையில் ஒன்று மதுவிலக்கு; அதனால்தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது.மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. ‘மதுவிலக்கே ஒற்றை நம் கோரிக்கை‘. இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம். சாதி, மத பெருமையை நாங்கள் பேசக்கூடியவர் அல்ல; பகவான் புத்தரின் பெருமைகளை பேசக்கூடியவர்கள். மதுவிலக்கில் திமுகவுக்கும்…

Read More

162 மீனவர்களை விடுவிக்க கோரி இலங்கை துணை தூதரகம் 8-ம் தேதி முற்றுகை: பாமக தலைவர் அன்புமணி

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும். இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் பாமகசார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும்,பாமக இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி, பாமக பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சியின் அனைத்து இணை…

Read More

நாட்டுக்கு வலிமை சேர்க்க கதர், கிராம பொருட்களை அதிகம் வாங்குவோம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

காந்தியடிகளின் 156-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின்வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கதர் ஆடைகளை அணிந்து மகிழ்வோம், நெசவாளர்களை ஆதரித்து மகிழ்வோம். தமிழகத்தில் உள்ள கதர் நூற்பாளர்கள், நெசவாளர்களின் பொருளாதார மேம்பாடு, அவர்களது நலனை கருத்தில் கொண்டு கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கதர், கிராம பொருட்களை அதிக அளவில் வாங்கி, நாட்டுக்கு வலிமை சேர்க்க வேண்டும் என மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,…

Read More

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது

நாள் யாராருக்கு போட்டி இடம் அக்.3 வங்கதேசம் – ஸ்காட்லாந்து ஷார்ஜா அக்.3 பாகிஸ்தான் – இலங்கை ஷார்ஜா அக்.4 தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் துபாய் அக்.4 இந்தியா – நியூசிலாந்து துபாய் அக்.5 வங்கதேசம் – இங்கிலாந்து ஷார்ஜா அக்.5 ஆஸ்திரேலியா – இலங்கை ஷார்ஜா அக்.6 இந்தியா – பாகிஸ்தான் துபாய் அக்.6 வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து துபாய் அக்.7 இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா ஷார்ஜா அக்.8 ஆஸ்திரேலியா…

Read More

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா நாளை நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறதுமாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாநாட்டு பந்தல் கால்நடும் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதன்படி நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும், மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்க…

Read More

மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் திட்டம்?

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்பட இஸ்ரேலின் அனஅனைத்து பகுதிகளையும் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்த நிலையில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீண்டும் தாக்கப்பட்டால், இஸ்ரேல் முழுவதும் உள்ள உள்கட்டமைப்பைத் தாக்குவோம் என ஈரான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி கூறியுள்ளார்….

Read More

ஈஷா மையத்தில் காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை

கோவை தொண்டாமுதூரில் உள்ள ஈஷா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈஷா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Read More

2024-ஆம் ஆண்டுக்கான ‘காந்தியடிகள் காவலர் விருது’

“முதலமைச்சர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக,பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம், கி.மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், க.கார்த்திக், தலைமை காவலர்-2963, துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம், கா.சிவா, இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை, சேலம் மாவட்டம் மற்றும் ப.பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764, ஆயுதப்படை, சேலம் மாவட்டம், ஆகியோருக்கு 2024-ஆம் ஆண்டுக்கான ‘காந்தியடிகள் காவலர் விருது’ வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.இவ்விருது,…

Read More

தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த்தை கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்தக் காட்சிகள் அனைத்தையும் வைத்தேன்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ என்ற விஜயகாந்த் பட பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தினை விஜயகாந்த் குடும்பத்தினரும் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார்கள். இதனிடையே, ‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த் படத்தின் பாடல், புகைப்படங்கள் என வைத்து கொண்டாடியது ஏன் என்று இயக்குநர்…

Read More

இந்திய விமானப் படை தினத்தையொட்டி, சென்னையில் அக்.6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி

இந்திய விமானப் படை தினத்தையொட்டி, சென்னையில் அக்.6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், விமானப் படையின் 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபடவுள்ளன.இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் புறநகர் மீது விமானப் படை விமானங்கள் பறந்தததை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். விமானப்…

Read More