
காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி
‘தூய்மை பாரதம்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் காந்தி மண்டபத்தில் மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டார், நாளை (அக்.,02) காந்தி ஜெயந்தியையொட்டி, வாளியில் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், கவர்னர் ரவி கூறியதாவது: மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; அவர்…