கூட்டணி ஆட்சிக்கு தயார்! அறிவித்தார் விஜய் இது திருமாவளவனை குறிவைத்தா?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தரப்படும் என்று நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

Read More

பெரியாரின் கடவுள் மறுப்பு பற்றிய அறியாமையா? விஜய் பேச்சு…

பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்ட பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்கப் போகிறோம்.

Read More

ஈரான் மீது தாக்குதல்; துவங்கியது இஸ்ரேல் ராணுவம்!

ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவங்கி உள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Read More

பா.ஜ.க. எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்- திருமாவளவன்

கூட்டணி கட்சிகளுக்கு இடையில், பிரச்னையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது என, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து விட்டார். இதை, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழிமொழிகிறது.திராவிடம் வேறு; தமிழர் வேறு என விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங் பரிவார் அமைப்புக்கு துணை போவதாக அமையும். தமிழக கவர்னர் ரவி, ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் இதைத்தான் விரும்புகின்றனர்.பா.ஜ., எதை எதிர்பார்க்கிறதோ, அதைத்தான் சீமான் செய்கிறார். சீமான் விவாதிப்பதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது. தி.மு.க., எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது…

Read More

கனடா பிரதமரை பதவி விலக வலியுறுத்தும் அவை உறுப்பினர்கள்

கனடா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் லிபரல் கட்சியின் 153 எம்.பிக்களில் 24 பேர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் ட்ரூடோ தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என எம்.பிக்கள் அவகாசம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 2025 அக்டோபருக்குள் நடக்கவுள்ள அடுத்த கூட்டாட்சித் தேர்தலில் ட்ரூடோவின் தலைமையின் கீழ் கட்சி பெரிய இழப்பை சந்திக்கலாம் என எம்.பிக்கள் அஞ்சுகின்றனர். மேலும், தற்போதைய கருத்துக்கணிப்புகளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு…

Read More

அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு பில்கேட்ஸ் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

Read More

 செபி தலைவர் மாதவி புரி புச் பொது கணக்கு குழு முன் இன்று (அக்.24) ஆஜராகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம், செபி அமைப்பின் மாதவி புரி புச், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது, காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகமும், புலனாய்வு அமைப்புகளும் அவர் மீதான விசாரணையை துவங்கின.இதில் ஆர்.இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டுகளுக்கு சாதகமாக கொள்கை முடிவுகள் எடுத்து தனது கணவருக்கு தொடர்புடைய ‘பிளாக்ஸ்டோன்’ நிறுவனத்துக்கு உதவி செய்ததாக மாதவி புரி புச்…

Read More

விளையாட்டுகளில் சாதித்த 100 வீரர்கள்: அரசு பணி

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதித்த 100 வீரர்களுக்கு பணி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்த, மாவட்ட வாரியாக, தகுதியான விளையாட்டு வீரர்கள் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கி உள்ளன. விளையாட்டு வீரர்களின் கல்வித் தகுதி, சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்ற பதக்கத்திற்கு தகுந்தபடி, அரசு துறைகளில் விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

Read More

கவர்னரின் நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்? அமைச்சர் கோவி.செழியன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 54,714 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார்.இது தொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; தற்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில்…

Read More

மாஜி அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னை: ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Read More