
மகாராஷ்டிராவில் நவ.20ல் ஓட்டுப்பதிவு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல்
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.