காரைக்குடி; டென்ஷனான மேயரால் பரபரப்பு

காரைக்குடி: மாநகராட்சி அலுவலகத்தில் முதல் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு. அதிமுக கவுன்சிலர் ஊழல் புகார் கூற திமுக வினர் எதிர்க்க டென்ஷனான மேயர் முத்துதுரை அதிமுக கவுன்சிலரை ஒருமையில் பேசி நீ கிழிச்சதுலாம் போதும் முதல்ல வெளியே போயா என கூறியதுடன் பத்திரிக்கையாளர்களை வெளியேறச் சொல்ல அனைவரும் முகம் சுளிப்பு

Read More

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

 2024-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 3 பேருக்கு பகிரப்பட்டுள்ளது. டேவிட் பெக்கர், டெமிஸ் ஹாசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. புரதத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்கான ஆராய்ச்சிக்காகவே இந்த மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் (8.10.2024) அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான் ஜே ஹாப்பீல்டு மற்றும் கனடாவில் வசிக்கும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித் துள்ளது. இயற்பியல் கருவிகளைப் பயன் படுத்தி இன்றைய சக்தி வாய்ந்த எந்திர கற்றலுக்கு அடிப்படையாக இருக்கும் முறைகளை உருவாக்கி யதற்காக இந்த பரிசு வழங்கப்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்; அறிவித்தது தமிழக அரசு

அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு…

Read More

சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய நிலையில் கோவையில் வேகம் எடுக்கும் ராணுவ தொழில் பூங்கா பணி

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வாரப்பட்டி கிராமத்தில் 420 ஏக்கரில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, இதற்கான மேம்பாட்டு பணிகளை தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்கா அமைக்க இருப்பது கோவை தொழில் துறையினர் இடையே வரவேற்பு பெற்று உள்ளது. இதற்காக தனியாரிடமிருந்து சுமார் 350 ஏக்கர் நிலத்தை டிட்கோ ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம்…

Read More

சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்ப நாயக்கர் சிலைகளை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் படைத் தளபதி வெண்ணி காலாடிக்கும், சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலிக்கும், செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, 50 லட்சம் ரூபாய் செலவில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு, 2.60 கோடி ரூபாய் செலவில் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Read More

ரத்தன் டாடா காலமானார்- நாடு தழுவிய இரங்கல்

புகழ்பெற்ற தொழிலதிபரும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா (86) நேற்று (அக்., 09) இரவு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். வணிகம் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து தேசிய அளவில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு சீல்- வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அதிஷி ?

முதல்வர் ஆதிஷியை அரசு பங்களாவிலருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற துணை நிலை கவர்னர் வி. சக்சேனா உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., கொடுத்த அழுத்தம் காரணமாகவே துணை நிலை கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது இல்லம் சீல் வைக்கப்பட்டது.நாட்டில் முதன் முறையாக முதல்வரை கட்டாயப்படுத்தி அரசு பங்களாவை காலிசெய்ய உத்தரவிட்ட சம்பவம் நடந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் துணை நிலை கவர்னர் மீது புகார்…

Read More

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது; சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் ஏழு கட்ட பேச்சு நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு…

Read More