‘சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகள் தீராத நோய்களையும் தீர்க்கும்’ என்பது போன்ற விளம்பரங்களை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் எந்த ஒரு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி நிறுவனங்களின் மருந்துகளுக்கு அங்கீகாரமோ, விற்பனை செய்யும் உரிமமோ வழங்குவதில்லை.மருந்து மற்றும் அழகு சாதன பொருட்களுக்கான சட்டப்படி, விற்பனை அனுமதியை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமே வழங்கும்.‘ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட மருந்துகள் அற்புதங்களை நிகழ்த்தும், தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும்’ என்பது போன்று விளம்பரங்கள் செய்வது சட்டப்படி குற்றம்.

Read More

12 மாவட்டங்களில் 46,931 வேலை வாய்ப்புகள்.! மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு.! 

அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில், 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Read More

ஹரியானா தேர்தல் : மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி..!

ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளரும், ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகத் காலை முதல் முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சிறுது நேரம் பின்னடைவை சந்தித்த அவர் அதன்பிறகு மீண்டும் முன்னிலைப் பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் 6,000-திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.

Read More

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில், ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக, பாஜ இடையே கூட்டணி உடைந்து, தற்போது இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறி, மாறி விமர்சித்து வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.வுடன் இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அவர் தொடங்கி…

Read More

தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 பருவமழை காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 100 இடங்களிலும் தமிழகத்தில் உள்ள மற்ற இடங்களில் 900 மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள மகத்தான திட்டம் என்றால் அது மக்களை தேடி மருத்துவம் ஆகும். 

Read More

சந்திரயான் 5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

டெல்லி: நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடி திட்டமான சந்திரயான் 5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியா-ஜப்பான் இணைந்து திட்டத்தை தயாரிக்க உள்ளனர். சந்திரயான் -5 திட்டத்துக்கு நிலவு துருவ ஆய்வு திட்டம்(லூபெக்ஸ்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் ரோவரையும், இஸ்ரோ லேண்டரையும் தயாரிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் -5 திட்டத்தில் அதிகசக்தி வாய்ந்த, அதிக எடை கொண்ட லேண்டரை, ரோவரை பயன்படுத்த உள்ளோம். நிலவில்…

Read More

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய கர்பா பாடல்: 

நவராத்திரியை முன்னிட்டு, பிரதமர் மோடி ‘கர்பா ‘ பாடல் ஒன்றை எழுதி உள்ளார். கர்பா என்பது பாரம்பரியமான குஜராத் நடனமாகும். முக்கியமாக நவராத்திரி காலத்தில் இந்த நடனம் நடக்கும்.இது குறித்து அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இது நவராத்திரியின் புனிதமான நாள். அன்னை துர்கா மீதான பக்தியால் ஒன்றுபட்டு பக்தர்கள் பல்வேறு வகைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘ஆவடிக்கலை’ என்ற தலைப்பில் கர்பா…

Read More

மெரினா கூட்ட நெரிசலில் 5 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.

Read More

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. “மைக்ரோஆர்என்ஏவின் கண்டுபிடிப்பு மற்றும் பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு” கண்டுபிடித்ததற்காக 2 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.

Read More