தங்கம் வாங்குவதில் இந்திய நுகர்வோர் சீனர்களை மிஞ்சி விட்டனர் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அதிக கொள்முதல் செய்ததன் மூலம், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய நுகர்வோர் 51% அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளனர்.இதற்கு, தங்கம் மீதான இறக்குமதி வரி 15% லிருந்து 6% ஆக, குறைத்து ஜூலை 23ம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது தான் காரணம். இந்த காலகட்டத்தில், சீனர்கள் 165 டன் தங்கத்தை வாங்கி உள்ளனர். ஆனால் இந்தியர்கள் 248.3 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் (மூன்றாம் காலாண்டு) இந்தியாவின் தங்கத்திற்கான தேவை 18% அதிகரித்துள்ளது.
