தமிழகத்தில், இம்மாதம்(நவம்பர்) வணிக சிலிண்டர் விலை, 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், வீட்டு சிலிண்டர் கடந்த மாதம், 818.50 ரூபாய் அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 1,903 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், ரூ.61.50 உயர்ந்து, 1964.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக, வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
