திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் குழு உறுப்பினர்கள் நேற்று காலை தனிப்படகில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே ரூ37 கோடியில் நடந்து வரும் கண்ணாடி பால பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் குழு தலைவர் காந்திராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: இயற்கை சீற்றங்கள் குறைவாக இருந்தால் வரும் ஜனவரி மாதத்திற்குள் பணிகளை முடித்துவிடலாம். அதன் பின்னர் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

Read More

மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் வித்யாலஷ்மி திட்டம்.

திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும். இந்த திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும். தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்த திட்டம் பொருந்தும். இதன் மூலமாக…

Read More

ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள் 

நாடு முழுதும் போலி ஜி.எஸ்.டி., நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக, கடந்தாண்டு மே 16ல் துவங்கி, ஜூலை 15 வரை நடைபெற்ற முதல் சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த 21,791 நிறுவனங்கள் வாயிலாக 24,010 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி., ஏய்ப்பு நடைபெற்றுள்ளதை கண்டறிந்தனர்.அதன் தொடர்ச்சியாக, 2024 ஆக., 16ம் தேதி முதல் அக்., 30 வரை, இரண்டாவது சிறப்பு விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இரண்டா வது சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட…

Read More