திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும். இந்த திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும். தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்த திட்டம் பொருந்தும். இதன் மூலமாக சுமார் 22லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விரும்பினால் பிரதமர் வித்யாலஷ்மி திட்டத்தின் பலன்களை பெற முடியும். PM-Vidyalaxmi என ஒரு போர்ட்டலை (Portal) உயர்கல்வித் துறை நிர்வகிக்கும். இதற்கு தகுதியுள்ள மாணவ/மாணவிகள் கல்விக் கடன்கள் பெற வேண்டும் எனில் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
