
சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்
கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், ‘திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது கட்சி கொள்கையாக இருக்கும்’ என்றார். அது மட்டுமின்றி, ‘ஆ ஊ என்று சத்தமா கோபமா பேசி விட்டால் போதுமா’ என்றும் கிண்டல் தொனியில் விஜய் பேசியிருந்தார். சீமானை மட்டம் தட்டும் வகையில் விஜய் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து விஜய் பற்றி சீமான் தாறுமாறாக விமர்சனம் செய்தார். சீமான் கூறியதாவது: ‘திராவிடமும் தமிழ் தேசியமும் வேறு வேறு. விஜய் கொள்கை…