அரசு அங்கீகாரம் பெற்ற 4750 தட்டச்சுப் பள்ளிகள் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

Spread the love

தமிழக அளவில் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமெஷன் தேர்வுகள் நடைபெறும். அரசு துறையில் தட்டச்சர் பதவிக்கு தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சி.ஓ.ஏ., தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் தேர்வில் ஆங்கிலம் அல்லது தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இது வரை 10 ம் வகுப்பு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) இளைநிலை தேர்ச்சி என இருந்தது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என தமிழக வணிகவியல் பள்ளிகள் சங்கம்தெரிவித்துள்ளது.நேரடியாக கணினியில் பயின்றால் விரல்களின் பயன்பாடு குறையும். பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்யும் நிலையும் உருவாகும். 
சங்கத்தின் மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற 4750 தட்டச்சுப் பள்ளிகள் உள்ளன. தட்டச்சில் ஆண்டிற்கு 4 லட்சம் மாணவர்களும், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்விற்காக ஆண்டிற்கு 40,000 மாணவர்களும் தட்டச்சுப் பள்ளிகளில் பயிற்சி மேற்கொள்கின்றனர். 5,000 ஆசிரியர்களும், 7500துணை ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேலான ஆங்கிலம் , தமிழ் தட்டச்சுப் பொறிகள் செயல்படுகின்றன. 10,000 க்கு மேலான கணினிகளும்உள்ளன. தற்போதைய அரசாணையால் இவற்றின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *