கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2013ம் ஆண்டுக்கு பின், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடக்கவில்லை. அடுத்த மாதம் 4, 5, 6ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, ரயில்வேயில் உள்ள, 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ்., எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் தங்களது பிரசாரத்தை துவக்கி உள்ளன.
