தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தப் பணிகள் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும்.
