
உலக கோப்பை கேரம் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த காஷிமா மூன்று பதக்கங்கள் வென்று சாதனை
அமெரிக்காவில் நடந்த, 6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த, நம் தமிழ் மகள், காஷிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்கு பாராட்டுக்கள். பெருமை கொள்கிறேன் மகளே. எளியோரின் வெற்றியில் தான் அரசின் வெற்றி அடங்கி இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. இவர், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள். தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும், இவர் வெற்றி பெற்றுள்ளர். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.