வழக்கறிஞர் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்க மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா: பார்கவுன்சில் பரிந்துரை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்குமாறு தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒசூரில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் கண்ணன் மீது அரிவாளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது,…

Read More

எனக்கும் முதல்வர் கனவு உண்டு: பழநியில் திருமாவளவன்.

பழனியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன். நேர்த்திக் கடன் செலுத்த வந்ததாக செய்திகளைக் கிளப்பி விடுவர். உண்மையில் அதற்காக வரவில்லை.காலம் காலமாக ஆதிக்க சக்திகளுக்கு அடிமைகளாக இருக்கும் மக்களை, ஆட்சி அதிகார பீடத்தில் அமரும் வகையில், அவர்களை மாற்ற வேண்டும். அதற்கு அம்மக்களை தகுதிப்படுத்த வேண்டும்.எனக்கும் முதல்வர் பதவி கனவு உண்டு. அதற்கேற்ப, இன்று முதல் புள்ளியை துவக்கியுள்ளோம். போகப்போக கனவை நனவாக்கும் இலக்கு நோக்கி…

Read More

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,2024 – 2025ம் ஆண்டு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதன்படி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜனவரி…

Read More