உலக செஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப் போட்டி இன்று முதல் (நவம்பர் 25) டிசம்பர் 13-ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதும், 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் குகேஷ் வெற்றி பெற்றால், மிக இளம் வயதில்…

Read More

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) நிர்வாகம், ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும், டேவன் கான்வேயை (நியூஸிலாந்து) ரூ.6.25 கோடிக்கும், கலீல் அகமதுவை ரூ.4.8 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை (நியூஸிலாந்து) ரூ.4 கோடிக்கும், ராகுல் திரிபாதியை ரூ.3.40 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. நூர் அகமதுவை (ஆப்கானிஸ்தான்) ரூ.10 கோடிக்கும், விஜய் சங்கரை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது.ஜெட்டா நகரில் ஐபிஎல் வீரர்களுக்கான திங்கள்கிழமையும் ஏலம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Read More

உ.பி. கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு; வாகனங்களுக்கு தீவைப்பு

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​தனர்.

Read More

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நவ.26, 27ம் தேதிகளில் நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூரில் அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More