கனமழையால் திருவண்ணாமலை கலெக்டர் வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்தது. பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் புயல் பாதிப்பு சென்னையில் இருந்து விரைந்த ராணுவ வீரர்கள் 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போளூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் முன்னேயும் செல்ல முடியாமல், ஜவ்வாது மலைத்தொடரில் ஏற்பட்ட வெள்ளம் பின்னேயும் ஓடுவதால் பஸ்சானது ஒரே இடத்தில் தத்தளித்த படியே நின்ற பஸ். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்கள், ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி. ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. கடலுார், விழுப்புரம் என, இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்புகளை பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்த, துணை முதல்வர் சென்றுள்ளார்.
