போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அதிரடி கட்டுப்பாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கை: கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால். எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட…

Read More

ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்?

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய ஆளுநராக தமிழகத்துக்கு நன்கு பரீட்சயமான முன்னாள் மத்திய அமைச்சரான விகே சிங் நியமிக்கப்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

Read More

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் என்னென்ன?

அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் இருந்தே மக்கள் பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Read More

வயநாடு தேர்தல்: பிரியங்காவை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ்போட்டி: பா.ஜ., அறிவிப்பு

ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்து உள்ளது.

Read More

டெல்லியில் காற்று மாசு: சுவாசப் பிரச்சினைகளால் பொது மக்கள் அவதி

டெல்லியில் தற்போது காற்றின் தரம் 226 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல்…

Read More

பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர்கள்: புதிய நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசு முடிவு

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பின்னர், கடந்த ஜூலை மாதம் எட்டு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை நியமித்தது, அவர்களில் ஏழு பேர் புதியவர்களாகவும், இருவர் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கான பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னரும், பலரும் தங்களது பதவிகளில் நீடிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கான பட்டியலை ஒன்றிய…

Read More

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள், நவ.,1ம் தேதி அரசு விடுமுறை; அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read More

‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ -ஆளுநர் பதில்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் ஓர் ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக்…

Read More

சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!

தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதில், கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை,” என கவர்னர் மாளிகை கூறியுள்ளது. ‘இது கவனக்குறைவால் நேரிட்ட தவறு’ என்று கூறியுள்ள பிரசார் பாரதி, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

Read More

கவர்னரை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். ஹிந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் கவர்னர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழகத்தையும் – தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னரை மத்திய அரசு உடனடியாகத்…

Read More