உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கண்ணா

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். அதன்படி, தலைமை நீதிபதிசந்திரசூட் வரும் நவம்பர் 10-ம்தேதி ஓய்வு பெறுகிறார்.

Read More

புரோ கபடியில் தமிழக வீரர்கள்

11வது புரோ கபடி தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் எப்போதும் இல்லாத வகையில் தமிழக வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அஜித்தை ரூ.66 இலட்சத்திற்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஸ்டூவர்ட்டை ரூ.14.2 இலட்சத்திற்கும், தமிழ்நாட்டின் சிறந்த கபடி வீரர் சதீஷ் குமாரை ரூ.13 இலட்சத்திற்கும், தனசேகரனை ரூ.9.4 இலட்சத்திற்கும் மும்பை அணி வாங்கியது. இளம் வீரர் தரணிதரனை ரூ.13 இலட்சத்திற்கு ஜெய்ப்பூர் அணியும், மணிகண்டனை ரூ.9 இலட்சத்திற்கு ஹரியானா…

Read More

ரூ.6,000 கோடி மோசடி நியோமேக்ஸ் வழக்கு

நியோமேக்ஸ் நிறுவன சொத்து களை முடக்குவதற்கான அரசாணை வெளியிடாவிட்டால், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற முதலீட்டுத்தொகை ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனால், இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலர் கைதாயினர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களும், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்….

Read More

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு விழா 

அதிமுக 53வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் நேற்று காலை 11 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை கொண்டாடிய பிறகு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான். அதுபற்றி இனி எந்த செய்தியும் போடாதீர்கள் என்று…

Read More

எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ், சேர மறுத்த 1,143 பேர் ஏன்?

சென்னை : மாநில ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களில் சேர்ந்ததால், 1143 சீட்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 13.5 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய், மாநில அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது; ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 19 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு 11 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.இதனால், சுயநிதி கல்லுாரிகளில் சேரும்…

Read More

உக்கடம் குளத்தில் ‘மிதக்கும்’ சோலார்

கோவை : உக்கடம் பெரிய குளத்தில், 50 சென்ட் நீர் பரப்பில், 1.45 கோடி ரூபாயில் ‘மிதக்கும் சோலார்’ அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.’நமக்கு நாமே’ திட்டத்தில், காய்கறி கழிவில் காஸ் தயாரிக்கும் திட்டத்துக்கு, சுவிட்சர்லாந்து துாதரகம், ஏற்கனவே நிதி வழங்கி, கோவை பாரதி பார்க் வளாகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதே போல உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் அமைக்க நிதி ஒதுக்கியது.அதில், 1.45 கோடி ரூபாயில், மிதக்கும் சோலார் மின்னுற்பத்தி நிலையம்…

Read More

புரோ கபடி லீக் 2024 – தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பட்டியல்

சென்னை: 2024 புரோ கபடி லீக் தொடருக்கு முன் நடந்த மினி ஏலத்தில் தமிழ் தலைவாஸ் நான்கு வீரர்களை மட்டுமே வாங்கியது. மொத்தம் 2.50 கோடி மட்டுமே ஏலத்தில் செலவிட்ட தமிழ் தலைவாஸ் அணி அதில் 2.15 கோடியை ஒரே வீரருக்கு அள்ளிக் கொடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சச்சின் தன்வார் (ரைடர், ரூ. 2.15 கோடி) அமீர்ஹோசைன் பஸ்தாமி (டிஃபெண்டர், ரூ. 16 லட்சம்) மொயின் சஃபாகி (ஆல்-ரவுண்டர், ரூ. 13 லட்சம்) சௌரப் ஃபகாரே…

Read More

கனமழையின் காரணமாக சென்னை மக்கள் பல்வேறு பாடங்களை கற்றுத் தேர்ந்தனரா?

 சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் ஓரளவிற்கு முடிக்கப்பட்டு சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழைநீர் வடிகால் சென்னைக்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. மழைநீர் வடிகால் குழாய்களில் குப்பையை கொட்டாமல் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை அறவே தவிர்ப்பது, குப்பையை மொத்தமாக கொட்டாமல் தரம் பிரித்து தருவது போன்ற பணிகளில் சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வருங்காலங்களில் சென்னையில் இருந்து வெளியேறும் மழைநீர் மிக விரைவில் வெளியேறி அது மக்களுக்கு பயன் தரும்…

Read More

ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார்.

ஹரியானா முதல்வராக நயாப் சைனி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Read More

சாட்டிலைட் இன்டர்நெட் உரிமம் இனி ஏலம் கிடையாது

தொலைதொடர்பு சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை நிறுவனங்கள் பெறுவதற்கு ஏல நடைமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட அளவு அலைக்கற்றையை ஆண்டுகள் அடிப்படையில் அரசு ஏலம் விடுவதும்; அதில் ஒரு பகுதியை, பணம் செலுத்தி உரிமம் பெற்று சேவை அளித்து கட்டணம் வசூலிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் நடத்தி உரிமம் வழங்க வேண்டும் என்று தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஜியோ நிறுவனம் அண்மையில் கடிதம் எழுதியது. ஜியோவுக்கு ஆதரவு அளிக்கும்…

Read More