
மழையில் தப்பியது சென்னை!
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. சென்னைக்கு வடக்கே அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. சென்னைக்கு வடக்கே அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான Sveriges Riksbank பரிசு, ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படும், MIT இன் டாரன் அசெமோக்லு மற்றும் சைமன் ஜான்சன் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றார். உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்கும் விழாவில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், திமுக…
இ-காமர்ஸ் தளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டன. இன்றெல்லாம் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது தங்களுடைய அளவு மற்றும் ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த தளங்கள் மக்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது. அதை சரி செய்யும்…
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், ஆபத்தை நிர்வகிக்கவும், சாட்போட்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி மூலம் வளர்ச்சியை அதிகரிக்கவும் நிதிச் சேவை வழங்குநர்கள் AI ஐப் பயன்படுத்துகின்றனர். உலகளவில் நிதிச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலின் அதிகரித்து வரும் பயன்பாடு நிதி நிலைத்தன்மை அபாயங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் வங்கிகளின் போதுமான இடர் குறைப்பு நடைமுறைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். AI இன் வளர்ந்து வரும் பயன்பாடு சைபர்…
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளது.இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை,…
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது; தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரி-ஆந்திரா இடையே சென்னை அருகில் நாளை(அக்.17) கரையைக் கடக்கும்.புயல் சின்னத்தை தொடர்ந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 2 தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை, சில இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், சென்னைக்கு வெளியே கடலில் இருந்த வலிமையான மேகங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. இவை மேலும் வலிமை அடைந்து.. சிட்டியை நோக்கி நகர்ந்து வருகின்றன.வரப்போகும் மழை மிக நீண்ட, தீவிரமான மழையாக இருக்க போகிறது. இந்த மழை 250 மிமீ மழையாக இருக்க போகிறது. முக்கியமாக இரவு நேரத்தில் மழை தீவிரம் அடையும். இரவு நேரம் நெருங்குவதால் மேகங்கள் இன்னும் வலிமை அடையும் வாய்ப்புகள் உள்ளன.போன் மற்றும் லேப்டாப் சார்ஜிங்…
கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேசமயத்தில், காவல்துறை,தீயணைப்புத் துறை, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.